கர்ப்ப காலத்தில் வயிற்று வலி (Stomach Pain During Pregnancy)
கர்ப்ப காலத்தில் குழந்தை வளரும் போது குழந்தைக்கு ஏற்றவாறு உடல் மாறும் போது கர்ப்பிணிகளுக்கு மேல் வயிற்றில் வலி (Stomach Pain) ஏற்படும். பொதுவாகவே இந்த வயிற்று வலிக்கு அபாயகரமான காரணங்கள் இல்லை என்றாலும் சில தீவிரமானதாக இருக்கலாம்.
கர்ப்பத்தின் ஒன்பது மாதங்களில் ஒரு கட்டத்தில் வயிற்று வலி அல்லது பிடிப்புகள் வருவது இயல்பானது. கர்ப்ப காலத்தில் வயிறு வலியே (Stomach Pain in Pregnancy) வரக்கூடாது, என்று நினைக்க கூடாது. வயிற்று வலி அல்லது பிடிப்புகள் இயல்பானது.
பெரும்பாலான நேரங்களில் அது சாதாரணமாக இருக்கும். ஏனெனில் குழந்தையை வயிற்றில் சுமக்கும் போது தசைகள் மற்றும் மூட்டுகளில் ஏற்படும் அதீத அழுத்தம் உங்கள் வயிற்றை சில நேரங்களில் அசெளகரியமாக உணர்த்தலாம்.
ஆனால் வயிற்றுப்பகுதியில் கூர்மையான அல்லது கடுமையான வலி இருந்தால் அது கவலைக்குரிய விஷயம். உங்களுக்கு உண்டாகும் வயிற்று வலிக்கு காரணம் என்ன, எது சாதாரணமானது எது அசாதாரணமானது என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.
கர்ப்ப காலத்தில் வயிற்று வலி (Stomach Pain) சாதாரணமானதா அல்லது அசாதாரணமானதா?
வட்ட தசைநார் வலி
நீங்கள் நிலைகளை மாற்றும் போது இந்த கூர்மையான குத்தல் வலியால் வகைப்படுத்தப்படலாம். அல்லது இது மந்தமான வலியாக ஆனால் நீடித்து இருக்கலாம். உங்கள் கருப்பையில் இருந்து இடுப்பு வரை இயங்கும் இரண்டு பெரிய தசை நாட்கள் மூலம் வட்டமான தசைநார்கள் மூலம் இந்த வலி உண்டாகிறது.
கருப்பை வளரும் போது இந்த தசைநார்கள் நீட்டி அசெளகரியத்தை உருவாக்குகின்றன. இந்த வலி பொதுவாக டிரைமெஸ்டர் (Second Trimester) மாதங்களில் உண்டாகிறது மற்றும் பாதிப்பில்லாததாக கருதப்படுகிறது.
மலச்சிக்கல்
கர்ப்ப காலத்தில் வாயுக்கள், புரோஜெஸ்ட்ரான் அளவு அதிகரிப்பதால் ஏற்படுகிறது. இந்த ஹார்மோன் அதிகரிப்பதால் இரைப்பை குடல் மெதுவாக செல்கிறது. இது உணவை மெதுவாக பயணிக்க செய்கிறது. இதனால் வயிற்று வலி (Stomach Pain) உண்டாகலாம். மலச்சிக்கலால் வரும் வயிறு வலியை தடுக்க பின்வருவனவற்றை முயற்சிக்கலாம்.
அதிக தண்ணீர் குடிப்பது, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்பது, உடற்பயிற்சி செய்வது மற்றும் போன்றவை அதிகப்படியான வாயு மற்றும் கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் ஏற்படுவதை எதிர்த்து போராடுவதற்கான சிறந்த வழிகள் ஆகும்.
குடல் அழற்சி
கர்ப்ப காலத்தில் குடல் அழற்சியை கண்டறிவது கடினமாக இருக்கும். ஏனெனில் கருப்பை பெரிதாகும் போது குடல்வால் மேல் இழுத்து தொப்பை பொத்தான் அல்லது கல்லீரலுக்கு அருகில் எழலாம்.
குடல் அழற்சியின் வழக்கமான அறிகுறி அடிவயிற்றின் கீழ் வலதுபுறத்தில் இருக்கலாம். எனினும் கர்ப்பிணிகள் இந்த இடத்தில் அதிக வலியை உணரலாம். மற்ற அறீகுறிகளில் பசியின்மை, குமட்டல் மற்றும் வாந்தி போன்றவை அடங்கும்.
பித்தப்பை கற்கள்
பித்தப்பை கற்கள் என்பது கூட வயிறு வலிக்கு காரணமாக இருக்கலாம். பித்தப்பை கற்கள் அடிவயிற்றின் மேல் வலது பகுதியில் குவிந்துள்ளன. சில நேரங்களில் இந்த வலி முதுகிலும் வலது தோள்பட்டைக்கு கீழும் உணரலாம்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு பித்தப்பை கற்கள் என்பது பொதுவானவை. பெரும்பாலும் அதிக எடை கொண்ட 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த வரலாற்றை கொண்டிருக்கின்றனர்.
ப்ராக்ஸ்டன் ஹிக்ஸ் சுருக்கங்கள்
சில சமயங்களில் இது பயிற்சி சுருக்கங்கள் என்று அழைக்கப்படுகிறது. இது குழந்தைக்கு ஏற்படும் ஆபத்தை விட இலேசான எரிச்சலை உண்டு செய்கிறது. இந்நிலை வயிற்றின் தசைகளை இறுக்குவது போல் உணர்த்துகிறது. இதனால் வயிறு உறுதியாக அல்லது கடினமாக இருப்பதாக பலர் தெரிவிக்கின்றனர். ஏனெனில் உண்மையான சுருக்கம் என்பது நெருக்கமாக இருக்கும். நீண்ட காலத்துக்கு நீடிக்கும் மற்றும் வலிமிகுந்ததாக இருக்கும்.
உண்மையான சுருக்கங்கள் சுவாசத்தை எடுத்து செல்லும். உங்கள் இயல்பான செயல்பாடுகளை நீங்கள் தொடர முடிந்தால், அது பெரும்பாலும் ப்ராக்ஸ்டன் ஹிக்ஸ் ஆகும். இது நீரிழப்பால் ஏற்படக்கூடும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதனால் அதிகமாக தண்ணீர் குடிப்பதன் மூலம் இந்த பிரச்சனையை அகற்றலாம்.
பொதுவான அசெளகரியங்கள்
மேலே பட்டியலிடப்பட்டுள்ளவற்றை தவிர கர்ப்பகாலத்தில் அனுபவிக்க கூடிய மற்றும் பொதுவாக அச்சுறுத்தாத பல பொதுவான வயிற்று உபாதைகளும் உள்ளன. வளர்ந்து வரும் கருப்பை, வயிற்று தொற்றுகள், சிறுநீரக கற்கள், நார்த்திசுக்கட்டிகள் மற்றும் உணவு உணர்திறன் ஆகியவை பாதிப்பில்லாத வயிற்று வலிகள் ஆகும்.
கர்ப்ப காலத்தில் வயிற்றுவலி தீவிரமாக இருக்கும் போது வயிற்று வலியை அனுபவிக்கும் பல பெண்களுக்கு ஆரோக்கியமான கர்ப்பம் இருந்தாலும், வயிற்று வலி கடுமையான ஆபத்தை உண்டாக்கலாம். அதற்கான காரணங்களும் அறிகுறிகளும்
எக்டோபிக் கர்ப்பம்
50 கர்ப்பங்களில் ஒருவருக்கு இந்த எக்டோபிக் கர்ப்பம் உண்டாகலாம். இது கருப்பையை தவிர வேறு எங்கும் கருமுட்டை பொருத்தும் நிலையாகும். பெரும்பாலும் முட்டை ஃப்லோபியன் குழாயில் பொருத்தப்படும். அதே நேரம் இந்த கர்ப்பம் தொடர்ந்து இருக்க முடியாது. மற்றும் மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. உங்களுக்கு எக்டோபிக் கர்ப்பம் ஆக இருந்தால் அது கர்ப்பத்தின் 6 வது மற்றும் 10 வது வாரங்களுக்கு இடையே கடுமையான வலி மற்றும் இரத்தப்போக்கு ஏற்படலாம்.
இந்த எக்டோபிக் கர்ப்பம் ஆபத்தை கொண்டிருக்கும் பெரும்பாலான பெண்கள் கடந்த காலத்தில் அதாவது முதல் கர்ப்பத்தில் எக்டோபிக் கர்ப்பத்தை கொண்டிருக்கலாம். அல்லது எண்டோமெட்ரியோசிஸ், ட்யூபல்லிகேஷன் அல்லது கருத்தரித்த நேரத்தில் கருப்பையக சாதனம் போன்றவற்றால் இந்நிலையை எதிர்கொள்ளலாம்.
நஞ்சுக்கொடி சீர்குலைவு
இந்த நஞ்சுக்கொடி சிதைவு என்பது உயிருக்கு ஆபத்தான நிலை. இதில் குழந்தை பிறப்பதற்கு முன்பே நஞ்சுக்கொடி கருப்பையிலிருந்து பிரிந்துவிடும். இதன் அறிகுறியே நிலையான இடைவிடாத வயிறு வலி தான். இது உங்கள் வயிற்றில் நிவாரணம் இல்லாமல் நீண்ட காலத்துக்கு கடினமாக இருக்கும்.
மற்றொன்று இரத்தம் தோய்ந்த திரவம் அல்லது பனிக்குட நீர் கசிவு. கூடுதல் அறிகுறிகளில் உங்கள் அடிவயிற்றில் மென்மை, முதுகுவலி, அல்லது இரத்தத்தின் தடயங்களை உள்ளடக்கிய திரவ வெளியேற்றம் ஆகியவை அடங்கும்.
கருச்சிதைவு
துரதிஷ்டமான நிலை இது. 15% முதல் 20% கர்ப்பங்கள் கருச்சிதைவில் முடிவடைகின்றன. இது கர்ப்பத்தை இழக்கும் பொதுவான வடிவமாகும். சில நேரங்களில் தன்னிச்சையான கருக்கலைப்பு என்றும் இது குறிப்பிடப்படுகிறது. கருச்சிதைவு பெரும்பாலும் கர்ப்பத்தின் முதல் 13 வாரங்களில் உண்டாகிறது. இந்த கருச்சிதைவுக்கான அறிகுறிகள் இலேசானது முதல் கடுமையான முதுகுவலி .
கர்ப்பத்தின் இறுதியில் பிரசவ வலியானது உண்மையான பிரசவ வலியாக இருந்தால் அது 5-20 நிமிடங்களுக்குள் உண்டாகும். சில சமயங்களில் பொய் வலி ஏற்படும், பிரசவ வலி மற்றும் பொய் வலி இடையில் உள்ள வேறுபாடுகளை தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் பழுப்பு நிறத்தில் அல்லது பிரகாசமான சிவப்பு நிறத்தில் இரத்தப்போக்கு உண்டாகும்.
தசைப்பிடிப்பு அல்லது யோனியில் இருந்து வெளியேறும் திசு அல்லது உறைவு பொருள்கள் போன்ற அறிகுறிகள் திடீர் குறைவு அடங்கும்.
சிறுநீர் பாதை நோய்த்தொற்று
கர்ப்ப காலத்தில் சிறுநீர் தொற்று எளிதில் சிகிச்சையளிக்கப்படா விட்டாலும் அதை அலட்சியம் செய்தால் சிறுநீர் பாதை தொற்று சிக்கல்களை உண்டாக்கும். சிறுநீர் கழிக்கும் போது வலி, அசெளகரியம் அல்லது எரிச்சலை உண்டு செய்யும். மேலும் அடி வயிற்று வலியை உண்டு செய்யும். காய்ச்சல், குமட்டல், வியர்வை அல்லது குளிர்ச்சியை உண்டு செய்யும்.
இதனோடு கீழ் முதுகில் வலி ஏற்பட்டால், விலா எலும்புகூண்டின் கீழ் அல்லது இடுப்பு எலும்பின் மேல் உங்கள் உடலின் பக்கங்களிலும் இருந்தால் அந்த தொற்று உங்கள் சிறுநீரகங்களுக்கு பரவ வாய்ப்புள்ளது.
பிரீகிளாம்சியா (Preeclampsia)
20 வார கர்ப்பத்துக்கு பிறகு சிறுநீரில் உயர் இரத்த அழுத்தம் மற்றும் புரதம் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படும் ஒரு முக்கியமான கவனிக்க வேண்டிய நிலை பிரீகிளாம்சியா ஆகும். இது மேல் வயிற்று வலி, பொதுவாக வலது பக்கத்தில் உங்கள் விலா எலும்புகளின் கீழ், பிரீகிளாம்சியாவை கண்டறிய பயன்படுத்தப்படும் பிற அறிகுறிகளுடன் சேர்ந்து வரலாம். குமட்டல், வாந்தி மற்றும் வயீற்றில் அதிகரித்த அழுத்தம் ஆகியவை உங்கள் வயிற்றை பாதிக்கும் அறிகுறிகள் ஆகும்.
முன்கூட்டிய பிரசவம்
நீங்கள் கர்ப்பமாக இருக்கும் 37 வாரங்களுக்கு முன்பு வழக்கமான சுருக்கங்களுடன் அது தொடர்ந்து முதுகுவலியை உண்டு செய்தால் உங்களுக்கு குறைப்பிரசவமாக இருக்கலாம். இது அலட்சியப்படுத்தக்கூடியதல்ல யோனி திரவம் அல்லது இரத்தம் அல்லது கருவின் இயக்கம் குறைதல் ஆகியவற்றுடன் உண்டாகலாம்.
ஒரு பெண் முன்கூட்டிய பிரசவ நிலையிலும் கூட அது ப்ராக்ஸ்டன் ஹிக்ஸ் அல்லது உண்மையான பிரசவமா என்பதை சொல்ல முடியாமல் போகலாம்.
இவை தவிர வயிற்று வலிக்கான வேறு சில காரணங்களும் உண்டு.
- உணவு முறை
- கருப்பையின் வளர்ச்சி
- சிறுநீரக கற்கள்
- ஹெபடைடிச்
பித்தப்பை நோய் மற்றும் கணைய அழற்சி இவை இரண்டும் பொதுவாக பித்தப்பை கற்கள் இருப்பதன் விளைவால் உண்டாக கூடியது. கர்ப்பகாலத்தில் வளரும் ஃபைப்ராய்டுகள், குடல் அடைப்பு போன்றவற்றாலும் வயிறு வலி வரலாம். இது மூன்றாவது மூன்று மாதங்களில் உண்டாகலாம்.
கர்ப்பிணிகள் வயிற்று வலி (Stomach Pain) வந்தால் அதை சாதாரணமாக எடுக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். சமயங்களில் அது தீவிரமான பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம்.
- வயிற்றில் கடுமையான வலி
- தொடர்ந்து வலி
- புள்ளி அல்லது இரத்தப்போக்கு
- காய்ச்சல்
- குளிர்
- பிறப்புறுப்பு வெளியேற்றம்
- சிறுநீர் கழிக்கும் போது அசெளகரியம்
குமட்டல் மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகள் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது நல்லது.
கர்ப்ப கால வயிற்று வலிக்கு வீட்டு வைத்தியம் உண்டா?
ப்ராக்ஸ்டன் -ஹிக்ஸ் சுருக்கங்கள் காரணமாக இருந்தால் வெதுவெதுப்பான நீர் குளியல் அடிவயிற்று வலி மற்றூம் தசைப்பிடிப்பில் இருந்து நிவாரணம் அளிக்க இவை உதவும். வலி உள்ள இடங்களில் வெந்நீர் ஊற்றிய பாட்டிலை துணியில் சுற்றி ஒத்தடம் கொடுக்கலாம். இது வலி நிவாரணியாக செயல்படும்.
வயிறு வலி சாதாரணமானது என்றால் நீங்கள் நீட்சி மற்றும் யோகா போன்ற மென்மையான பயிற்சிகள் குறிப்பாக முதல் மூன்று மாதங்களில் செய்யலாம். வாய்வு பிரச்சனைக்கு சிகிச்சையளிக்க முடியும்.
நாள் முழுவதும் அதிக திரவ ஆகாரங்கள், தண்ணீர் குடிப்பது நல்லது. ஏனெனில் ப்ராக்ஸ்டன் ஹிக்ஸ் காரணமே நீரிழப்பு தான். அதனால் அடிக்கடி உணவை உண்ணுங்கள். பழங்கள், காய்கறிகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவு அவசியம்.
சிறுநீர் கழிக்கும் உணர்வு வரும் போது உடனடியாக சிறுநீர் கழிக்க வேண்டும். சிறுநீர்ப்பை காலியாக வைக்க வேண்டும். சிறுநீர் கழிக்க வேண்டும் என்னும் உந்துதலை கட்டுப்படுத்தக்கூடாது.
Follow @ Google
News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
வேகமாக உடல் அசைவு செய்யாமல் படிப்படியாக உட்காரும் அல்லது எழுந்து நிற்கும் பழக்கத்தை உருவாக்குங்கள். இது தசைப்பிடிப்புகளை குறைக்க உதவும்.
அவ்வபோது மருத்துவ பரிசோதனைக்கு செல்லும் போது வித்தியாசமான அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை அணுகுவது நல்லது.