பிரசவ காலம் நெருங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் (tips during labor in tamil)!
கர்ப்ப காலம் முழுக்க பல விஷயங்கள் குறித்த விழிப்புணர்வு இருந்தாலும் பிரசவக்காலத்தில் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள் (tips during labor in tamil) பலவும் உண்டு.
கர்ப்பிணி பெண்ணை சுற்றி இருப்பவர்கள் தேவையானதை பார்த்து பார்த்து செய்யகூடும் என்றாலும் கர்ப்பிணி பெண்கள் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்களையும் உண்டு. அவற்றில் என்னெல்லாம் முக்கியமானவை என்பவற்றை பட்டியலிட்டிருக்கிறோம்.
மருத்துவ பரிசோதனை
கர்ப்ப காலத்தில் இறுதி மூன்றாம் ட்ரைமெஸ்டர் தொடக்கம் முதலே மருத்துவருடனான பரிசோதனை அதிக முறை இருக்கும். இதை தவிர்க்காமல் செய்துகொள்ள வேண்டும்.

இறுதி மாதங்களில் கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டிய உணவு குறித்து மருத்துவரிடமும், டயட்டீஷியனிடமும் ஆலோசனை செய்வது அவசியம்.
நடைபயிற்சி
நடைபயிற்சி கர்ப்ப காலம் முழுக்க அவசியம் என்றாலும் கர்ப்பகாலத்தின் இறுதி மாதங்களில் மிக அவசியம் என்றே சொல்லலாம்.
இரவு உணவுக்கு பின்பு மிதமான நடைபயிற்சி செய்யும் போது அது தூக்கமின்மை பிரச்சனையை வராமல் தடுக்கும். ஆழ்ந்த உறக்கம் வரக்கூடும்.
நடைபயிற்சியை கூட வீட்டின் அருகில் செய்ய வேண்டும். குளியலறை, கழிப்பறை என எல்லா இடங்களிலும் கவனமாக நடக்க வேண்டும்.
கர்ப்பிணீகள் இருக்கும் வீட்டில் கழிப்பறை சுத்தம் அவசியம் இருக்க வேண்டும். இதனால் நோய்த்தொற்று வராமல் பாதுகாக்க முடியும்.

கர்ப்பிணி தனியாக நடக்காமல் துணையுடன் நடந்தால் உடல் ஆரோக்கியம் போன்று மனதளவிலும் அதிக ஆரோக்கியத்தை கொண்டிருப்பார்கள்.
இரவில் வயிற்றில் வளரும் குழந்தையிடம் செல்லமாக பேசுவதன் மூலம் குழந்தையின் அசைவு குறைவாக இருக்கும். தந்தை, தாய் இருவரது ஆசை வார்த்தைகளும் குழந்தையை ஆசுவாசப்படுத்தும்.
பெற்றோர்கள் பேசும் போது குழந்தை அசைவு மூலம் தன் மகிழ்ச்சியை தெரிவிக்கும். குழந்தையின் செல்ல உதையை அம்மாக்கள் தெளிவாக உணர முடியும்.
இதையும் தெரிந்து கொள்ள: கர்ப்ப காலத்தில் தைராய்டு அறிகுறிகள்!
மன அழுத்தம்
பிரசவத்தின் இறுதி மாதங்களில் மன அழுத்தம் வரக்கூடாது. இது சுகப்பிரசவத்திலும் பிரச்சனையை உண்டாக்கிவிடக்கூடும்.

குறிப்பாக பிரசவ வலி அச்சத்தை கொண்டிருக்கும் கர்ப்பிணிகள் மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். எப்போதும் பிரசவ வலி குறித்த அச்சம் தேவையில்லை. கர்ப்பத்தின் மூன்றாம் ட்ரைமெஸ்டரில் மருத்துவரை சந்திக்கும் போது பிரசவ வலி குறித்த தகவல்களை தெளிவாக அறிந்துகொள்ளலாம்.
பிரசவ வலிக்கும் பொய் வலிக்கும் இடையில் உள்ள வித்தியாசங்கள் என்ன?
பிரசவ வலிக்கு முன்பு அடிக்கடி பொய்வலி வரக்கூடும், பிரசவ வலிக்கும் பொய் வலிக்கும் உள்ள வித்தியாசங்கள் தெரிந்து கொள்வது அவசியம். பல கர்ப்பிணிகளும் இதை பிரசவ வலி என்று நினைத்துவிடுகிறார்கள்.

பிரசவ வலி என்பது அடி வயிற்றிலிருந்து சுளீர் என்ற வலியை கொடுக்கும். இந்த வலி தொடர்ந்து இருக்காது. அதிக நிமிடங்களுக்கு இடையில் இந்த வலி உண்டாக கூடும். பிறகு படிப்படியாக இடைவெளி குறையும். வலி உணர்வும் அதிகரிக்க கூடும்.
பொய் பிரசவ வலியானது அப்படி இருக்காது. தொடர்ந்து இருக்கும். படிப்படியாக குறையும். அதனால் முதல் முறை கருத்தரித்த பெண்கள் பிரசவ வலி குறித்து ஓரளவேனும் தெரிந்துவைத்திருப்பதன் மூலம் பதட்டத்தை தணிக்கலாம்.
வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்
பிரசவம் நெருங்கும் போது எக்காரணம் கொண்டும் வெளியில் செல்ல வேண்டாம். குறிப்பாக வழக்கமாக பரிசோதிக்கும் மருத்துவமனையை தாண்டி வேறு ஊர்களுக்கு செல்வதும் உசிதமல்ல.
மருத்துவரை மாற்ற கூடாது
கருவுற்ற பிறகு ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மருத்துவரை மாற்றிக்கொண்டிருப்பார்கள். இதனால் பிரசவ காலங்களில் சிக்கல்கள் உண்டாகும் போது அப்பெண்ணின் மருத்துவ வரலாறு குறித்து மருத்துவர் அறிந்து சிகிச்சை செய்வது சிரமமாக இருக்கும்.
அதனால் கருவுற்ற தொடக்கத்திலேயே மகப்பேறு குறித்த அத்தனை வசதிகளையும் கொண்ட மருத்துவமனையை அறிவது அவசியம்.
உறவினர்கள் கர்ப்பிணியின் உடல் நிலையை தெரிந்து வைத்து கொள்ள வேண்டும்!
ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணும் அவள் துணை அல்லது உடன் இருக்கும் குடும்பத்தார் கர்ப்பிணியின் உடல் நிலையை தெரிந்துவைத்திருக்க வேண்டும்.
குறிப்பாக கர்ப்ப கால நீரிழிவு, கர்ப்ப கால உயர் அழுத்தம், முன்னரே தைராய்டு, இதய நோய், வேறு ஏதேனும் குறைபாட்டை கொண்டிருந்தால் அது குறித்தும் அதற்காக எடுத்துகொள்ளும் மருந்துகள் குறித்தும் தெரிந்துவைத்திருக்க வேண்டும்.

அல்லது கர்ப்பிணி தன் மருத்துவ வரலாறு குறித்த கையேட்டில் தெளிவாக இது குறித்து எழுதி வைத்திருப்பது அவசியம். இதன் மூலம் பிரசவ வலி இருக்கும் போது அதை கவனித்து சிகிச்சை அளிக்க உதவியாக இருக்கும்.
மருத்துவ கையேடு போன்று பிரசவத்துக்கு தேவையான பொருள்களையும் முன்கூட்டியே தயார் செய்து கொள்வது நல்லது. கர்ப்பிணிகள் இறுதி ட்ரைமெஸ்டர் காலத்திலேயே மருத்துவமனைக்கு எடுத்து செல்ல வேண்டிய பொருள்களை பேக் செய்ய வேண்டும்.
ஆடைகளில் கவனம்
கர்ப்பகாலத்தில் எப்படி தளர்வான ஆடைகளை அணிந்திருக்கிறீர்களோ அதே போன்று பிரசவக்காலத்துக்கு பிறகும் தளர்வான ஆடைகள் அவசியம். பிரசவத்துக்கு பிறகும் நோய்த்தொற்று தாக்க வாய்ப்புண்டு என்பதால் ஆடைகளை சுத்தமாக துவைத்து வெயிலில் உலர்த்தி எடுத்துவைக்க வேண்டும்.
தாய்ப்பால் கொடுக்கும் முறை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்
பிரசவத்துக்கு பிறகு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க ஏதுவாக பிரத்யேகமான ஆடைகள் கிடைக்கிறது. அதை வாங்கி பயன்படுத்தலாம். அதை தயார் செய்து வைத்து கொள்வது நல்லது. அதே போன்று பிரசவத்துக்கு பிறகு ரத்தபோக்கும் அதிகரிக்க கூடும். அதற்கேற்ப நாப்கின்களையும் எடுத்து வைத்துகொள்ள வேண்டும்.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
குழந்தையின் ஆடையில் கவனம்
குழந்தைக்கு பயன்படுத்த முன்கூட்டியே பருத்தி துணிகளை வாங்கி சிறுதுண்டு போன்று கத்தரித்து வைத்துகொள்வதும் நன்மை பயக்கும். அதனோடு மிதமான போர்வை, பருத்தி துண்டுகள், குழந்தைக்கு மெல்லிய ஆடை, குழந்தையின் கை, காலுக்கு ஏற்ற உறைகள் போன்றவற்றையும் தயார் செய்யுங்கள்.
இதையும் தெரிந்து கொள்ள: பிரசவத்திற்குப் பிறகு உடல் எடையைக் குறைக்க 5 குறிப்புகள்!
பிரசவக்காலத்தின் இறுதியில் சருமத்துக்கு பாதிப்பு உண்டாக்கும் எந்தவிதமான ஆபரணங்கள் அணிவதையும் தவிர்ப்பதே நல்லது. பிரசவக்காலத்தை சற்று கவனத்தோடு கையாண்டால் அதிக மகிழ்ச்சி தரும் காலமே.