கர்ப்ப காலத்தில் பொதுவாக இதை சாப்பிடாதே, இதை சாப்பிடு என்று சில வகையான உணவு கட்டுப்பாடுகளுடன் இருக்கிறது. ஒருபுறம், நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போது இரண்டு பேருக்கு சாப்பிட வேண்டும் என்று கூறுகிறார்கள் ஆனால் இது உண்மை இல்லை.
கர்ப்ப காலத்தில் பழங்கள் எவ்வளவு ஆரோக்கியமானவை மற்றும் சத்தானவையாக இருந்தாலும், மேலும் அவை ஆரோக்கியமான கர்ப்ப கால உணவின் ஒரு பகுதியாக பரிந்துரைக்கப்பட்டாலும், கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய சில பழங்கள் (Fruits to avoid during pregnancy in tamil) உள்ளன.
பழங்களில் நிறைய நார்ச்சத்து, நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. இருப்பினும், எல்லா பழங்களும் ஒரே மாதிரியானவை அல்ல. சில பழங்கள் கர்ப்ப காலத்தில் சிக்கலை ஏற்படுத்தும்.
எனவே, கர்ப்ப காலத்தில் எந்தெந்த பழங்களை தவிர்க்க வேண்டும் (Fruits to avoid during pregnancy in tamil) என்பதை சரியாக தெரிந்து கொள்ளுவது அவசியம்.
கர்ப்ப காலத்தில் சில பழங்களை சாப்பிடுவதை ஏன் தவிர்க்க வேண்டும்?
பழங்கள் பொதுவாக கருவுறும் தாய் மற்றும் அவளுக்குள் கருவில் வளரும் குழந்தைக்கு பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன.
மேலும் முதலில் கர்ப்பமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள், நோயை உண்டாக்கும் பூச்சிக்கொல்லிகளை அகற்ற, பழங்களை சாப்பிடுவதற்கு முன்பு நன்கு கழுவ வேண்டும் என்பதை நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய பழங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுவதும் அவசியம். மருத்துவர்கள் கர்ப்பிணிப் பெண்களுக்கு அவர்களின் கர்ப்பத்தில் ஏதேனும் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக சில பழங்களை சாப்பிடுவதைத் தவிர்க்க அறிவுறுத்துகிறார்கள்.
கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய பழங்கள் என்ன என்பதை இந்த வலைப்பதிவில் முழுமையாக அறிந்து கொள்ளுவோம்.
கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய பழங்கள் – Fruits to avoid during pregnancy in tamil
கர்ப்ப காலத்தில் எந்த பழங்களை சாப்பிடக் கூடாது என்பதற்கு, பின்வரும் பழங்கள் சுவையாக இருந்தாலும், இதை அதிக அளவு சாப்பிட்டால் உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கலாம் மற்றும் உங்கள் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் கூட தீங்கு விளைவிக்கலாம்.
அன்னாசி பழம்
அன்னாசிப்பழத்தில் ப்ரோமைலைன் இருப்பதாகக் காட்டப்படுகிறது, இது கருப்பை வாயை மென்மையாக்கும் மற்றும் கருப்பை வாயின் அமைப்பை மாற்றக்கூடிய என்சைம்களைக் கொண்டிருக்கின்றன, எனவே அதிக அளவில் சாப்பிட்டால் ஆரம்ப கால கர்ப்பத்தில் சிக்கலை ஏற்படுத்தும்.
மருத்துவர்கள் அன்னாசிப்பழத்தை சிறிய அளவுகள் சாப்பிடுவது பாதுகாப்பானது என்று கூறுகிறார்கள், மேலும் இந்த பழத்தில் சில பயனுள்ள ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை உடலுக்கு நன்மை கொடுக்கும்.
இருப்பினும், பாதுகாப்பாக இருக்க, அன்னாசிப்பழம் உட்கொள்வதை கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் குறைக்க பரிந்துரைக்கப்படுகிறது
பேரீட்சை பழம்
பேரீட்சை பழத்தில் அதிகமான வைட்டமின்கள் நிறைந்திருந்தாலும், அதிக அளவு பேரீச்சம் பழங்களை கர்ப்பிணிகள் உட்கொள்ள வேண்டாம். பேரீட்சை பழம் கர்ப்ப கால உடல் சூடு ஏற்படுத்துகிறது மற்றும் ஆரம்ப சுருக்கங்கள் வழிவகுக்கும்.
ஒரு நாளைக்கு 1 முதல் 3 பேரிச்சம் பழங்களுக்கு உள் மற்றும் தான் கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டாம்.
பப்பாளி
பப்பாளி பழம் நன்றாக பழுத்திருக்கும் போது, கர்ப்பிணி தாய்மார்கள் தங்கள் கர்ப்ப கால உணவுகளில் சேர்த்துக் கொள்வது மிகவும் பாதுகாப்பானது.
இருப்பினும், சரியாக பழுக்காத பப்பாளியில் லேடெக்ஸ் உள்ளது, இது முன்கூட்டியே வயிறு சுருக்கங்களை ஏற்படுத்தும். பழுத்த பப்பாளியில் உள்ள தோல் மற்றும் விதைகள் கர்ப்பிணிகள் சாப்பிட பாதுகாப்பற்றவை.
இந்த அபாயங்களைத் தவிர்ப்பதற்காக பலர் கர்ப்பமாக இருக்கும்போது பப்பாளியை முழுவதுமாக சாப்பிடுவதை தவிர்த்து விடுகிறார்கள்.
திராட்சை
சில சமயங்களில் பெண்கள் கர்ப்ப காலத்தில் திராட்சையை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
ஏனெனில், திராட்சையில் ரெஸ்வெராட்ரோல் என்ற ஹார்மோன் சமநிலையின்மையை உயர்த்தக்கூடிய கலவை உள்ளது, இது கர்ப்பகால சிக்கல்களை ஏற்படுத்தும் ஒரு நச்சு கலவையாகும்.
இருப்பினும், அன்னாசிப்பழத்தைப் போலவே, குறைவான அளவு சாப்பிடும் போது திராட்சை பொதுவாக குறைந்த ஆபத்துள்ள உணவாக இருக்கும்.
வாழைப்பழங்கள்
வாழைப்பழங்கள் மிகவும் ஆரோக்கியமானவை, ஆனால் உங்களுக்கு ஒவ்வாமை அல்லது கர்ப்பகால நீரிழிவு இருந்தால் அவை முழுமையாக தவிர்க்கப்பட வேண்டும்.
வாழைப்பழத்தில் சிட்டினேஸைக் கொண்டிருக்கின்றன, இது ஒவ்வாமை எதிர்வினைகளைத் தூண்டக்கூடிய லேடெக்ஸ் போன்ற பொருளாகும்.
மேலும் இதில் சர்க்கரை அதிகமாக இருப்பதால் கர்ப்ப காலத்தில் உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கலாம்.
உறைந்த பெர்ரி (Frozen Berries)
கர்ப்ப காலத்தில் உறைந்த உலர்ந்த மற்றும் பேக் செய்யப்பட்ட உணவைத் தவிர்ப்பது நல்லது. புதிய பழங்களை மட்டுமே உட்கொள்ள முயற்சிக்கவும்.
புளியம்பழம்
இது உங்களின் இன்றியமையாத உணவு பொருளாக இருக்கலாம், கர்ப்பிணிகள் இதை சாப்பிட விரும்பலாம்.
கர்ப்ப காலத்தில் புளியம்பழம் சாப்பிடுவதற்கு மிகவும் மோசமான பழம் அல்ல, ஏனெனில் புளியம்பழம் காலை நோய் மற்றும் குமட்டலுக்கு ஒரு மருந்தாக செயல்படும்.
இருப்பினும் குறைவாக சாப்பிடுவது முக்கியமானது. இதில் புரோஜெஸ்ட்டிரோன் உற்பத்தியை குறைக்க கூடிய கலவைகள் உள்ளன.
குறைந்த புரோஜெஸ்ட்டிரோன் உற்பத்தி குறைப்பிரசவத்தை ஏற்படுத்தும் மற்றும் கருவில் உள்ள உயிரணுக்களில் சேதத்தை கூட ஏற்படுத்தலாம்.
ஒரு கர்ப்பிணிப் பெண் ஒரு நாளைக்கு எவ்வளவு பழங்கள் சாப்பிட வேண்டும்?
கர்ப்பிணிப் பெண்கள் ஒரு நாளைக்கு 2 கப் பழங்களை சாப்பிடுமாறு மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். இது தோராயமாக ஒரு நாளைக்கு 400 கிராம் பழங்கள்.
முடிந்தவரை பழங்களை தோல் உரித்து அப்படியே கடித்து சாப்பிடுவது கர்ப்பிணிக்கு சிறந்தது, முடிந்த அளவு பழங்களை சாறு பிழிந்து குடிக்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள்.
முடிவுரை
கர்ப்ப கால உணவில் பழங்கள் முக்கிய பகுதியாகும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.
எனவே, சில கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய பழங்களை (Fruits to avoid during pregnancy in tamil) நீங்கள் தவிர்க்கலாம் அல்லது குறைவான அளவு மட்டும் சாப்பிடலாம், கர்ப்ப காலத்தில் எந்தவொரு உணவுகளையும் நீங்கள் சாப்பிடுவதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் இருந்து அனுமதி பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
மேலும் உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு சென்னையில் உள்ள சிறந்த மகளிர் மருத்துவ நிபுணரான டாக்டர் தீப்தி ஜம்மியுடன் உங்கள் சந்திப்புகளை உங்கள் வருகையை இப்போதே முன் பதிவு செய்யவும். ஜம்மி ஸ்கேன் மையத்தை தொடர்பு கொள்ள இந்த எண்ணை பயன்படுத்தவும் 733 8771 733 !