உங்கள் பிரசவ தேதியை எவ்வாறு கணக்கிடுவது (how to calculate the edd during pregnancy in tamil) என்று நீங்கள் முயற்சி செய்தீர்களா? கர்ப்ப கால நாட்கள், வாரங்கள் மற்றும் மாதங்கள் போன்றவை உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும்.
உங்கள் குழந்தை எப்போது பிறக்க போகிறது என்பதைக் கண்டறிய சில கர்ப்ப கால கால்குலேட்டரைப் பயன்படுத்தலாம் இல்லை என்றால் உங்கள் மருத்துவர் கணித்து சரியாக சொல்லுவார்கள்.
மேலும் நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் கடைசி மாதவிடாய் சுழற்சியின் தேதியை சரியாக குறித்து வைப்பது, சரியாக உங்கள் இறுதி மாதவிடாய் தேதியை வைத்து தான் உங்கள் பிரசவ தேதியை கணிக்க முடியும்!
கர்ப்ப காலத்தில் பிரசவ தேதி என்றால் என்ன?
உங்கள் குழந்தை இந்த தேதியில் பிறக்க வாய்ப்புள்ளது என குறிப்பிடப்படும் தேதி உங்கள் பிரசவ தேதியாகும்.
இது பொதுவாக (EDD – expected due date) எதிர்பார்க்கப்படும் பிரசவ தேதி என்றும் குறிப்பிடப்படுகிறது.
கர்ப்பம் சுமார் 280 நாட்கள் வரை நீடிக்கும். இது ஒன்பது மாதங்கள் மற்றும் ஏழு நாட்கள் அல்லது 40 வாரங்கள். கர்ப்பம் 37 வாரங்களில் முழுமையான குழந்தை வளரும் காலமாக கருதப்படுகிறது.
சராசரி கர்ப்பம் 37 வாரங்கள் முதல் 42 வாரங்கள் வரை நீடிக்கும்.
எதிர்பார்க்கப்படும் பிரசவ தேதி (EDD) எவ்வாறு கணக்கிடப்படுகிறது? – (How to Calculate the EDD During Pregnancy in Tamil)
அண்டவிடுப்பினை சரியாக கண்காணிக்காத வரை, நீங்கள் எப்போது கருவுற்றீர்கள் மற்றும் உங்கள் கர்ப்ப நாட்கள் என்ன என்பதைத் துல்லியமாக அறிய வழி இல்லை.
பெரும்பாலான பெண்கள் மாதவிடாய் தொடங்கிய முதல் நாளிலிருந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு அண்டவிடுப்பின் பின்னர் விரைவில் கருத்தரிக்கிறார்கள்.
நீங்கள் எதிர்பார்க்கப்படும் பிரசவ தேதியைக் கணக்கிடுவதற்கான (how to calculate the edd during pregnancy in tamil) சில வழிகள் இங்கே உள்ளன.
உங்கள் கடைசி மாதவிடாய் நாட்களில் (LMP – last menstrual period) முதல் நாளிலிருந்து 40 வாரங்கள் அல்லது 280 நாட்களைக் கணக்கிடுவதன் மூலம் உங்கள் கர்ப்ப கால தேதியைக் கணக்கிடுவதற்கான பொதுவான முறை.
நீங்கள் எப்போது கருத்தரித்தீர்கள் என்பதைத் துல்லியமாகத் தெரிந்துகொள்ள, உங்கள் அண்டவிடுப்பினை கண்காணிக்கும் கருவியைப் பயன்படுத்தலாம் அல்லது உங்கள் அண்டவிடுப்பின் அறிகுறிகளைக் கண்காணித்துக்கொண்டிருந்தால், கருத்தரித்த தேதியின் அடிப்படையில் உங்கள் பிரசவ தேதியைக் கணக்கிடலாம்.
பொதுவாக, மாதவிடாய் தொடங்கிய முதல் நாளிலிருந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு பெண்களுக்கு கருமுட்டை வெளிவரும். எனவே உங்கள் கருத்தரித்த நாளிலிருந்து 38 வாரங்கள் அல்லது 266 நாட்களைக் கணக்கிடுங்கள்.
நீங்கள் உடலுறவு கொண்ட நாளில் நீங்கள் கருத்தரிக்க வேண்டிய அவசியமில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
விந்தணுக்கள் உங்கள் ஃபலோபியன் குழாய்களுக்குள் ஐந்து நாட்கள் வரை உயிர் வாழலாம்.
எனவே, நீங்கள் உடலுறவு கொண்ட ஐந்து நாட்களுக்குப் பிறகு, ஒரு கரு முட்டையை ஓவரியில் இருந்து வெளிவந்து அது காத்திருக்கும் பிறகு அங்கு விந்தணுக்களால் கருத்தரிக்கப்படும், இதுவே நீங்கள் கருத்தரிக்கும் சரியான நாள் ஆகும்.
கடைசி மாதவிடாய் தேதி அல்லது கருத்தரிக்கும் தேதி தெரியாவிட்டால் என்ன செய்வது?
உங்கள் கடைசி மாதவிடாய் தேதி (LMP) அல்லது கருத்தரிக்கும் தேதி உங்களுக்குத் தெரியாவிட்டால், உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள். மருத்துவர் உங்களுக்கு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்ய பரிந்துரைப்பார்.
இந்த ஸ்கேன் பரிசோதனை செய்வதால் நீங்கள் கர்ப்பத்தில் எவ்வளவு தூரம் இருக்கிறீர்கள் என்பதைக் கணக்கிடலாம் மற்றும் உங்களின் பிரசவ தேதியை தீர்மானிக்கவும் உதவும்.
பிரசவ தேதியை கணக்கிடுவது எவ்வளவு துல்லியமானது?
பிரசவ தேதியை கணக்கிடும் கருவி அல்லது மருத்துவர் கணக்கீடு கூறும் பிரசவ தேதி எப்போதும் தோராயமாக தான் இருக்கும், அதற்க்கு முன்னும் பின்னுமாக தான் உங்கள் குழந்தை பிறகும்.
உங்கள் குழந்தை எப்போது வெளியில் வரும் என்று யாராலும் உறுதியாகச் சொல்ல முடியாது. மதிப்பிடப்பட்ட பிரசவ தேதி எதுவும் 100% துல்லியமாக இருக்காது.
வெறும் நான்கு சதவிகிதக் குழந்தைகள் மட்டுமே சரியான தேதியில் பிறக்கின்றன! சில ஆய்வுகளில் படி, 20 பேரில் ஒருவருக்கு மட்டுமே சரியான தேதியில் குழந்தை பிறக்கிறது.
ஆனால் உங்களின் சரியான பிரசவ தேதியை அறிவது முக்கியம், ஏனெனில் இது உங்கள் குழந்தையின் வளர்ச்சியைக் கண்காணிக்கப் பயன்படுகிறது மற்றும் உங்கள் கர்ப்பம் முழுவதும் முக்கியமான பரிசோதனைகள் மற்றும் நோயயை கண்டறிய உதவுகிறது.
உங்கள் EDD கணக்கீடு செய்வதில் உள்ள சிரமம் என்னவென்றால், உங்கள் எல்.எம்.பியை நீங்கள் நினைவில் கொள்ளவில்லை என்றால், உங்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் இருந்தால் அல்லது நீங்கள் எப்போது கருத்தரித்தீர்கள் என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், பிரசவ தேதியை கணக்கீடு செய்வதில் வித்தியாசம் இருக்கும்.
உங்கள் குழந்தை எப்போது பிறக்கும் என்பது பற்றிய துல்லியமான தகவலை தெரிந்து கொள்ள, உங்கள் மருத்துவர் கர்ப்பத்தின் ஆறு முதல் ஒன்பது வாரங்களுக்கு இடையில் ஸ்கேன் செய்வார்.
உங்கள் குழந்தையின் குறைப்பிரசவத்திற்கு காரணம் (37 வாரங்களுக்கு முன் பிறப்பு) :
- முந்தைய குறைப்பிரசவ குழந்தை போன்ற உங்கள் மருத்துவ வரலாறு
- ஒன்றுக்கு மேற்பட்ட கருவை சுமப்பது உட்பட கர்ப்பகால சிக்கல்கள்
- புகைபிடிப்பது உட்பட வாழ்க்கை முறை மாற்றங்கள்
- நீங்கள் 17 வயதுக்கு கீழ் அல்லது 35 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால் குறைப்பிரசவம் ஏற்படும்
உங்கள் குழந்தையின் வருகையைத் தெரிந்து கொள்ளுவதற்கு ஒரு சரியான பிரசவ தேதி உதவுகிறது.
அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்யும் போது உங்கள் பிரசவ தேதியை கணக்கிட முடியும். ஒரு துல்லியமான பிரசவ தேதியை உங்கள் கரு மருத்துவ நிபுணர் வழங்குவதால் உங்கள் ஆரோக்கியத்தையும் வளரும் கருவையும் ஆரோக்கியத்தையும் கண்காணிக்க உதவுகிறது.
மேலும் உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு இப்போதே ஜம்மி ஸ்கேன்ஸ் மையத்தை தொடர்பு கொள்ளுங்கள்.