பெண்கள் கர்ப்ப காலத்தில் இடுப்பு மற்றும் யோனி சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அழுத்தம் அல்லது கனத்தை (Vaginal pain during pregnancy in tamil) உணர்கிறார்கள்.
இது இப்போது தான் ஏற்படுகிறது என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. ஏனெனில் முதல் ட்ரைமெஸ்டர், இரண்டாம் ட்ரைமெஸ்டர் மற்றும் மூன்றாம் ட்ரைமெஸ்டர் காலங்களில் என இந்த வலி எப்போது வேண்டுமானாலும் வரலாம்.
கர்ப்பிணி வயிற்றில் சுமக்கும் கருவானது படிப்படியாக வளரும் போது உடலில் திடீர் என்று அசாதாரண மாற்றங்கள் உண்டாகலாம்.
மேலும் கருவின் வளர்ச்சிக்கு அதிகப்படியான இடம் தேவைப்படலாம். கரு வளர இடம் வழங்குவதோடு உடல் அனைத்து விதமான வழிகளிலும் அதற்கான நீட்டுதலை செய்கிறது.
அப்போது உண்டாகும் அசெளகரியங்களில் இடுப்பு மற்றும் பெண் உறுப்பில் உணரக்கூடிய அழுத்தமும் வலியும் ஒன்று
இது குறித்து உங்கள் மருத்துவரிடம் பேசலாம். அதனால் கர்ப்பகாலத்தில் வரக்கூடிய பெண் உறுப்பு வலி மற்றும் அழுத்தம் குறித்து இப்போது தெரிந்துகொள்ளலாம்.
யோனி அழுத்தம் மற்றும் வலி என்பதற்கு காரணங்கள் புரிந்துகொள்வது எளிதானது அல்ல. இது எப்போது நிகழ்கிறது என்பதை பொறுத்து அதன் தீவிரத்தை நீங்கள் உணரலாம்.
இந்த வலி உணர்வு என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடலாம். சிலருக்கு தீவிர அழுத்தத்தை உண்டு செய்யலாம். சிலருக்கு மந்தமான வலியாக இருக்கலாம். சிலருக்கு முழு உடலின் எடையும் தாங்குவது போல் உணலாம்.
பெண் உறுப்பு வலி என்பது ஒவ்வொரு ட்ரைமெஸ்டரிலும் எப்படி இருக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
முதல் மூன்று மாதங்களில் பெண் உறுப்பில் வலி ( Vaginal pain during pregnancy in tamil – first trimester)
இந்த முதல் ட்ரைமெஸ்டரில் வலி என்பதற்கு எடை அதிகரிப்பு காரணமாக இருக்கலாம். கர்ப்பத்தின் தொடக்கத்தில் ரிலாக்ஸின் என்னும் ஹார்மோன் தசைகளை தளர்த்த உதவுகிறது.
இவை தான் குழந்தை பிறக்கும் போது இடுப்பு பகுதி வழியாக செல்ல எளிதாக உதவுகிறது. இது ஆரம்ப கட்ட கர்ப்பத்தில் இதன் அளவு அதிகமாக இருக்கும்.
இந்த ஹார்மோன் யோனி அல்லது அதை சுற்றியுள்ள தசை பகுதியில் வலியை அல்லது பதற்றத்தை உண்டு செய்யலாம்.
இது குறித்த விலங்கு ஆராய்ச்சிகளின் படி ரிலாக்ஸின் இடுப்பை ஆதரிக்கும் தசைநார்கள் மூலத்தை பலவீனப்படுத்தும். இதனால் யோனி பகுதியில் கீழ் ஒன்று தள்ளுவது போன்ற அழுத்த உணர்வை உண்டு செய்யும்.
இரண்டாவது மற்றும் மூன்றாவது ட்ரைமெஸ்டர் காலங்களில் வரக்கூடிய பெண் உறுப்பு வலி – ( Vaginal pain during pregnancy in tamil- second & third trimester)
கர்ப்பம் இடுப்பு தளத்தை பலவீனப்படுத்துகிறது. இரண்டாவது மற்றும் மூன்றாவது மூன்று மாதங்களில் இடுப்புத்தளம் பலவீனமடைவதும், இடுப்பு பகுதியில் அழுத்தம் அதிகரிப்பதும் யோனி அழுத்தத்தை உண்டு செய்யலாம்.
இடுப்பு கருப்பை, யோனி சிறுநீர்க்குழாய் மற்றும் சிறுநீர்ப்பை உள்ளிட்ட இடுப்பு உறுப்புகளை இது பாதுகாக்கிறது. இந்நிலையில்
அதிலும் ஏற்கனவே பிரசவித்த பெண்களாக இருந்தால் அவர்கள் இடுப்புத்தளத்துக்கு சேதம் உண்டாகலாம். இதனால் கர்ப்பம் உண்டாகும் போது இடுப்பு பகுதி பலவீனமடைந்து மேலும் சோர்வை உண்டு செய்யலாம்.
கர்ப்பத்தின் இரண்டாம் ட்ரைமெஸ்டரில் உடல் எடை அதிகரிக்கும் பொது கர்ப்பம் வளரும் போது கருப்பை கீழ் உடலில் அதிக அழுத்தம் கொடுக்கிறது.
இடுப்பு பலவீனம் ஆகும் போது யோனியில் அதிக நிரம்பிய உணர்வு அல்லது இடுப்பு பகுதியில் பொதுவான வலி உண்டாகிறது.
இவை தவிர வேறு என்னென்ன காரணங்களால் இடுப்பு வலி உண்டாகிறது?
கர்ப்பகாலத்தில் பாக்டீரியா வஜினோசிஸ் அல்லது ஈஸ்ட் தொற்று யோனி பகுதியில் அழுத்தத்தை உண்டு செய்யலாம். இது அசெளகரியத்துடன் சற்று வித்தியாசமான அறிகுறிகளை கொண்டுள்ளது. யோனி பகுதி அழுத்தத்துடன் அரிப்பு அல்லது வெள்ளைப்படுதல் இருக்கலாம்.
சிறுநீர் பாதை நோய்த்தொற்று இருந்தாலும் அது யோனி பகுதியில் அழுத்தத்தையும் வலியையும் உணர செய்யலாம்.
இன்னும் சில இடுப்பு மற்றும் யோனி பகுதி வலிக்கு அரிதான காரணங்களும் இருக்கலாம். ஃபைப்ராய்டுகள் அல்லது கருப்பையின் புற்றுநோய் அல்லாத வளர்ச்சி கட்டிகள் வலியை உண்டு செய்யலாம்.
கர்ப்ப காலத்தில் இதற்கு சிகிச்சை அல்ல சில நிவாரண நடவடிக்கைகள் மூலம் வலியை குறைக்க செய்யலாம்.
சில கர்ப்பிணிகளுக்கு பால்வினை நோய்கள் இருந்தாலும் கூட அது பிறப்புறுப்பு அருகில் அரிப்பு, வலி அல்லது வீக்கத்தை உண்டு செய்யலாம்.
கர்ப்பிணிகள் யோனி பகுதி வலியை பிரசவ வலியுடன் ஒப்பிட்டுப்பார்ப்பதும் உண்டு. இதுவும் சரிதான் சில நேரங்களில் பிரசவ வலி அசெளகரியத்தால் வகைப்படுத்தப்படுகிறது. அது தொடந்து இந்த வலி அறிகுறியுடன் வெளிப்படலாம்.
பிறப்புறுப்பு அழுத்தம் தீவிரமாக இருக்கும் போது அது Pelvic organ prolapse (POP) அறிகுறியாக இருக்கலாம். இடுப்பு அதன் அருகில் இருக்கும் உறுப்புகள் கீழே நகரும் போது.
சில சமயங்களில் யோனி அல்லது மலக்குடலுக்குள் செல்லும்போது இந்நிலை உண்டாகிறது. இது சிகிச்சையளிக்ககூடியதே என்றாலும் இது சிறுநீர் அடங்காமை, தீவிர வலி போன்றவற்றை உண்டு செய்யலாம்.
கர்ப்பிணி பெண் கடுமையான அழுத்தத்தை உணரும் போது குடல் அல்லது சிறுநீர்ப்பையை கட்டுப்படுத்துவத்தில் சிரமம் இருக்கும் போது யோனி பகுதியில் வலி உறுப்புக்குள் ஏதேனும் கனமாக இருப்பது போன்ற உணர்வை சந்தித்தால் மருத்துவரை அணுக வேண்டும்.
இன்னும் சில கர்ப்பிணி பெண்களுக்கு கருப்பை வாய் பலவீனமாக இருக்கலாம். இது கர்ப்பப்பை வாய் பற்றாக்குறை என்று அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் உள்ள சில பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படலாம்.
முன்கூட்டிய பிரசவத்துக்கு செல்லலாம். இந்த பிரச்சனை இருந்தால் கருப்பையை ஆதரிக்கும் அளவு கருப்பை வாய் வலுவோடு இருக்காது.
அதிக அழுத்தம் இருந்தால் கர்ப்பத்தின் ஆரம்ப கட்டத்திலேயே மருத்துவரிடம் பரிசோதனைக்கு செல்வது தீவிர விளைவுகளை தடுக்க உதவும்.
கர்ப்பிணி யோனியில் உண்டாகும் வலியை எப்படி குறைப்பது?
கர்ப்பகாலத்தில் யோனி வலியை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பதை பொறுத்து சிகிச்சை தேவைப்படலாம். உடல் நீட்சியின் விளைவால் இருந்தால் சில செயல்பாடுகள் உங்களுக்கு உதவும்.
கர்ப்பிணிகளுக்கென்ற பிரத்யேக பெல்ட் வயிற்றுப்பட்டைகள் கர்ப்பப்பையின் எடையை ஆதரிக்க செய்கிறது.
சூடான வெதுவெதுப்பான குளியலில் யோனி பகுதியை ஊறவைத்தல் நிவாரணம் அளிக்கும். தண்ணீரில் எப்சம் உப்புகளை சேர்க்கலாம். கர்ப்பகாலத்தில் பயன்படுத்தப்படும் அந்த தசைகளை பராமரிக்க உதவும்
மென்மையான உடற்பயிற்சி செய்வது நல்லது. கர்ப்பிணி ஆடாமல் அசையாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது அசெளகரியத்தை அதிகப்படுத்தும்.
நாளின் தொடக்க அல்லது முடிவில் 15 முதல் 30 நிமிடங்கள் நடை அல்லது ஒருவித இயக்கம் செயல்படுத்துவது ஊக்குவிக்கபடுகிறது. இது இரத்த ஓட்டத்துக்கு உதவியாக இருக்கும்.
அனுபவமிக்க வல்லுநர்களின் உதவியுடன் யோகா, மகப்பேறுக்கு முந்தைய மசாஜ் போன்றவை உடல் விரிவடைந்து மாறுவதால் மெதுவாக நகர்த்த உதவும்.
முடிவுரை
பெண் உறுப்பில் வலி தீவிர அழுத்தம் கர்ப்பிணிகளுக்கு (sharp vaginal pain during pregnancy in tamil) ஏற்படக்கூடியதே என்றாலும் அது சாதாரணமானதா அல்லது அசாதாரணமானதா என்பதை அறிய உங்கள் மகப்பேறு மருத்துவரை அணுகுங்கள்.