உங்கள் கர்ப்பம் முன்னேறும் போது, உங்கள் கருவின் வளர்ச்சி, உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் பிறக்கும் வரை நீங்கள் எவ்வளவு உடல் செயல்பாடுகளை வைத்திருக்க வேண்டும் என்ற 8 மாத கர்ப்பம் (8 Month Pregnancy in Tamil) அறிகுறிகள் பற்றி முழுமையாக விளக்கம் இந்த பதிவு.
37 வாரங்களின் முடிவில் உங்கள் குழந்தை கிட்டத்தட்ட முழு காலத்தை அடைகிறது. கர்ப்பத்தின் 40 வது வாரத்தில் உங்கள் பிரசவ தேதி குறையும் போது, 20 பெண்களில் 1 பேர் மட்டுமே அவர்களின் சரியான தேதியில் குழந்தை பிரசவிக்கிறார்கள்.
உங்களின் 38 மற்றும் 40 வாரங்களுக்கு இடையில் எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம். அதாவது கர்ப்பத்தின் 8 வது மாதத்தின் முடிவில் நீங்கள் எந்த நேரத்திலும் பிரசவத்திற்குச் செல்லலாம் என்று எதிர்பார்க்கலாம்.
8 மாத கர்ப்பம் (8 Month Pregnancy in Tamil)எத்தனை வாரங்கள்?
8 மாத கர்ப்பம் என்பது 32 வாரங்கள்.
8 மாத குழந்தை எப்படி இருக்கும்?
- குழந்தையின் நீளம் தலை முதல் கால் வரை 43 செ.மீ இருக்கும், எடை 2 கிலோ இருக்கும்.
- 8 மாத கர்ப்பம் ஆன குழந்தையின் உடல் இரும்பு, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற முக்கியமான தாதுக்களை தேக்கி வைக்கிறது.
- இப்போது தேக்கி வைத்த இரும்புச் சத்துகளை குழந்தை திட உணவுகளை சாப்பிடத்துவங்கும் வரை, அதாவது அந்த குழந்தையின் முதல் 6 மாதங்களுக்கு அந்த சத்துகளை நீட்டிக்கும்.
- இப்போது உங்கள் குழந்தை அம்னோடிக் திரவத்தை உள்ளிழுத்து வெளியேற்றுவதன் மூலம் சுவாசத்தை பயிற்சி செய்யும்.
- உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தால், அவனது வெளிப்புற பிறப்புறுப்பு உருவாகி, விதைப்பையில் இறங்கத் தொடங்கும்.
- பெண் குழந்தையாக இருந்தால், அவளது கருப்பை அனைத்து முட்டைகளுடனும் உறுவாகி இருக்கும்..
8 மாத கர்ப்பத்தில் (8 Month Pregnancy in Tamil) சாப்பிட வேண்டிய உணவுகள்!
8 மாத கர்ப்பம் என்றபோது கர்ப்பிணிகள் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எந்த உணவுகளையும் சாப்பிடவேண்டாம் என்பதில் உறுதியாக இருங்கள்.
வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகள்:
கர்ப்பத்தின் கடைசி மாதங்களில் இரும்பு, கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது முக்கியம்.
இரத்த இழப்பு பிரசவத்தின் முக்கிய பகுதியாகும். அதனால் சாப்பிடும் உணவில் தேவையான இரும்புச்சத்து இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம். கால்சியம் குழந்தையின் எலும்புகளை வலுவாக வைத்திருக்கும்.
- பச்சை காய்கறிகள்
- நட்ஸ்
- ஆப்ரிகாட்
- உலர்ந்த பழம்
- முட்டை
- மீன்
- பால் பொருள்கள்
- வாழைப்பழங்கள்
கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் மற்றும் கொழுப்புகள்:
- பீன்ஸ்
- உருளைக்கிழங்கு
- முழு தானியங்கள்
- இனிப்பு உருளைக்கிழங்கு
- பருப்பு வகைகள்
- பெர்ரி
- தர்பூசணி
நார்ச்சத்து நிறைந்த உணவுகள்:
கர்ப்பத்தின் இந்த கட்டத்தில் அதிக நார்ச்சத்துள்ள உணவுகள் முக்கியம். இந்த உணவுகள் எல்லாம் ஊட்டச்சத்து மிகுந்தவை. கர்ப்பத்தின் இறுதி மாதங்களுக்கு தேவையான அளவு நார்ச்சத்தும் அவற்றில் உள்ளது.
- சோளம்
- அவகேடோ
- பழங்கள்
- பழுப்பு அரிசி
- ரொட்டிகள்
- காலிஃப்ளவர்
- ப்ரக்கோலி
8 மாத கர்ப்ப அறிகுறியில் (8 Month Pregnancy in Tamil) முதுகு வலி இருக்குமா?
கர்ப்ப காலத்தில் உடலில் ஹார்மோன் மாற்றம் ஏற்படும் என்பதால் உடலில் சில வலிகள் உண்டாவது இயல்பு தான். ரிலாக்சின் என்னும் ஹார்மோன் கர்ப்பிணிகளுக்கு இப்போது அதிகம் சுரக்கும்.
இது பிரசவ காலத்தில் குழந்தை பிறப்பதை எளிதாக்குவதற்காக உடலில் உள்ள தசை, தசைநார்கள், இடுப்பு எலும்புகள் மற்றும் பிறப்பு உறுப்புகளை விரிவடையச் செய்கிறது.
மேலும் கருப்பை விரிவடைய தொடங்கியவுடன் குழந்தை உங்கள் நடு முதுகெலும்பில் உள்ள தட்டுகளை அழுத்துவதால் முதுகெலும்பிலிருந்து வெளிவரும் நரம்புகள் பாதிக்கப்படுகின்றது. அதனாலேயே கர்ப்ப காலத்தில் முதுகு வலி வருவதை அதிகமாக கர்ப்பிணிகள் அணுபவிக்கின்றனர்.
வலி அதிகமாக இருக்கும் நேரங்களில் மருத்துவரிடம் கேட்டு ஒரு சில உடற்பயிற்சியினை மேற்கொள்ளும் போது இந்த முதுகு வலியில் இருந்து சற்று இளைப்பாறலாம்.
8 மாத கர்ப்பிணிகள் செய்ய வேண்டியவை
- நன்றாக மூச்சு பயிற்சி செய்யுங்கள்
- மனதை அமைதியாகவும், சந்தோசமாகவும் வைத்துகொள்ளுங்கள்.
- ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்து விடாமல் அடிக்கடி எழுந்து நடைப்பயிற்சி செய்யுங்கள்.
- நல்ல ஓய்வில் இருங்கள்.
- உங்கள் மருத்துவரை அணுகி உங்கள் உடல் மற்றும் உங்கள் குழந்தையின் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது என்பதை சரிபார்த்துகொள்ளுங்கள்.
- பிரசவத்திற்கு ஏற்ற உடற்பயிற்ச்சிகளை செய்யுங்கள்.
- உங்கள் உடலில் நீர்சத்து குறையாமல் பார்த்துகொள்ளுங்கள்.
- பாசிட்டிவான (positive) எண்ணங்களை மட்டும் கொண்டிருங்கள்
- குழந்தை பிறக்கும் தேதியை நினைத்து பயம் கொள்ளாமல் மகிழ்வோடு இருங்கள்.
- உடலுக்கு சத்து கொடுக்கும் ஆரோக்கியமான ஆகாரங்களை எடுத்துகொள்ளுங்கள்.
8 மாத கர்ப்பதில் (8 Month Pregnancy in Tamil)ஏற்படும் மாற்றங்கள் என்ன?
திடீர் வலி
திடீர் வலி குழந்தையின் எடை அதிகரித்த அழுத்தத்தால் ஏற்படலாம். மூன்றாவது ட்ரைமெஸ்டரில் மாதங்களில், குழந்தை இடுப்புப் பகுதியில் விழுந்து, கருப்பை வாய் சுற்றியுள்ள நரம்புகளில் அழுத்தம் கொடுப்பதால் இந்த வலி ஏற்படுகிறது.
கர்ப்ப காலத்தில் சிலருக்கு படபடப்பு காரணமாக வயிற்றில் வலி இருக்கும். இது பொதுவாக சில வினாடிகள் மட்டுமே இருக்கும்.
உங்கள் இடுப்பில் மின்னல் போன்ற வலி இருக்கும் போது உங்கள் மூச்சை இழுத்துவிடுங்கள். கைகள் மற்றும் முகம் வீக்கம், கர்ப்ப காலத்தில் கால் வீக்கம் இயல்பானது. ஆனால் அதிகப்படியான வீக்கம் ப்ரீ-எக்லாம்சியா (Preeclampsia) எனப்படும் தீவிர நிலையின் அறிகுறியாக இருக்கலாம்.
உங்கள் கால்கள் அல்லது கணுக்கால் திடீரென கடுமையாக வீங்கியிருந்தாலோ, உங்கள் கைகள், முகம் கண்கள் வீங்கியிருந்தாலோ, உங்கள் மருத்துவரைத் தொடர்பு கொள்ளுங்கள்.
கர்ப்பத்தின் பிற்பகுதியில் லேசான மற்றும் மிதமான வீக்கம் தவிர்க்க முடியாதது. தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலமும், நிறைய தண்ணீர் குடிப்பதன் மூலமும், வீக்கத்தைக் குறைக்கலாம். இரவில் தூங்கும் போது இடது பக்கம் சாய்ந்து தூங்குங்கள். கர்ப்ப கால சிறந்த தூங்கும் முறை தெரிந்து கொள்வது அவசியம்.
தோல் அரிப்பு
கர்ப்ப காலத்தில் உங்கள் வயிறு மற்றும் மார்பகங்கள் வளரும் போது தோல் நீட்டப்படுவதால் அரிப்பு ஏற்படுவது இயல்பானது.
மாய்ஸ்சரைசர்கள் பயன்படுத்துவதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் கேளுங்கள்.
பொதுவாக, கடுமையான அரிப்பு என்பது கொலஸ்டாசிஸ் (இது உடனடி மருத்துவ கவனிப்பு தேவைப்படும் கல்லீரல் நோய்) போன்ற அடிப்படை சுகாதார நிலையின் அறிகுறியாக இருக்கலாம்
வரி தழும்பு
உங்கள் வயிற்றில் குழந்தை வேகமாக வளருவதால், தோல்களில் இந்த வரித்தழும்புகள் வருகிறது. இது குறிப்பாக வயிறு மற்றும் மார்பில் அதிகமாக காணப்படும்.
பசியின்மை மாற்றம்
உங்கள் கர்ப்பத்தின் முடிவில், நீங்கள் பசியுடன் இருப்பதைக் காணலாம். மூன்றாவது டிரைமெஸ்டரில், சில பெண்கள் தங்கள் பசியை இழக்கிறார்கள்.
இருப்பினும், கர்ப்பத்தின் கடைசி சில வாரங்களில் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் ஏராளமான சத்தான உணவு தேவைப்படுகிறது.
மூன்றாவது டிரைமெஸ்டரில், எதிர்பார்ப்புள்ள தாய்மார்களுக்கு ஒரு நாளைக்கு கூடுதலாக 300 கலோரிகள் தேவைப்படுகின்றன.
இதை சாத்தியமாக்க, புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளின் கலவையான சிறிய உணவுகள் சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
8 மாத கர்ப்பத்தில்(8 Month Pregnancy in Tamil) குழந்தையின் நிலை என்ன?
- குழந்தை கண் இமைகளை மூடித் திறப்பதோடு, தலையையும் அங்கும் இங்குமாய் அசைக்கும்.
- மூளையில் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சி ஏற்பட்டிருக்கும்.
- 29-ம் வாரத்தில் இருந்து குழந்தை தினமும் சிறுநீரை வெளியேற்றம் செய்யும்.
- அடிக்கடி குழந்தை அசையும், அவ்வப்போது தூங்கவும் செய்யும்.
- குழந்தை வேகமாக வளருவதால் கர்ப்பப்பையில் இட நெருக்கடி தோன்றும். தலை கீழ்நோக்கி பெல்விஸ் பகுதிக்கு திரும்பும். இந்த தருணத்தில் சில குழந்தைகள் தலையை மேல்நோக்கி வைத்துக்கொண்டோ, குறுக்காக படுத்தது போன்ற நிலையிலோ காணப்படும்.
8 மாத கர்ப்பத்தில் (8 Month Pregnancy in Tamil)பயணம் செய்யலாமா?
பிரசவ தேதியை நெருங்கும்போது பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. அந்த வகையில் 5 மாதங்களுக்கு மேல் பயணங்கள் செய்யலாம்.
பயணம் செய்வதற்கு முன், உங்கள் மருத்துவரை அணுகி உங்களுடைய உடல்நிலை, ரத்த அழுத்த அளவுகள், குழந்தையின் நிலை போன்றவற்றைத் தெரிந்து கொள்வது அவசியம். ஒருவேளை உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால் கண்டிப்பாக நீங்கள் பயணத்தைத் தவிர்ப்பது நல்லது.
ஏனென்றால் உயர் ரத்த அழுத்தம் காரணமாக திடீரென வலிப்பு வர வாய்ப்பு அதிகம் என்பதால், அவர்கள் கவனமாக இருக்க வேண்டும். தலைவலி, மயக்க பிரச்சனை, கை மற்றும் கால்களில் வீக்கம், குழந்தையின் அசைவு சரியாகத் தெரியாமல் இருப்பது, நெஞ்செரிச்சல், வாந்தி போன்ற அறிகுறிகள் இருந்தால் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.
பயணத்துக்கு முன் உங்கள் மருத்துவக் குறிப்புகளைக் கையில் வைத்துக்கொண்டு பயணம் செய்யுங்கள்.
பயணம் செய்யும்போதும் கர்ப்பிணிகள் கவனத்துடன் இருக்க வேண்டும். நீண்ட நேரம் கால்களைத் தொங்கவிட்டபடி பயணம் செய்தால் ரத்தக்கட்டு கால்களில் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
எனவே, பயணம் செய்யும்போது அடிக்கடி கால்களை நீட்டி மடக்குவது அவசியம். தண்ணீர் அதிகம் எடுத்துக்கொள்வதும், தளர்வான உடைகளை அணிந்துகொள்வதும் மிக அவசியம்.
8 மாத கர்ப்பத்தில் (8 Month Pregnancy in Tamil) அல்ட்ரா சவுண்ட் எடுக்க வேண்டுமா?
கர்ப்பத்தின் 8 மாதங்களில் எடுக்கப்படும் ஸ்கேன் குழந்தையின் வளர்ச்சியை காண செய்யப்படும் ஒன்றாகும். பொதுவாக ஸ்கேன் 28 வாரங்களிலும், 32 வாரங்களுக்கு பிறகும் எடுக்கப்படும்.
8 மாத கர்ப்பம் (8 Month Pregnancy Symptoms) அதாவது மூன்றாம் ட்ரைமெஸ்டரில் எடுக்கப்படும் ஸ்கேன் குழந்தையின் எடை, அளவு, தலை, வயிறு, தசைகள், காலின் நீளம், கருப்பை சுற்றி இருக்கும் அம்னோடிக் திரவம், அதன் அளவு, குழந்தையின் இதயத்துடிப்பு போன்றவற்றை கண்காணிக்க எடுக்கப்படும்
ஒன்றாகும்.
குழந்தையின் எடை, குழந்தை கருப்பையினுள் கர்ப்பிணியின் இனப்பெருக்க உறுப்பை நோக்கி கீழ் இறங்கியுள்ளதா, அல்லது குறுக்கு நெடுக்குமாக பக்கவாட்டில் உள்ளதா என்பதை பரிசோதிப்பார்கள்.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
மேற்கண்ட பதிவில் 8 மாத கர்ப்பம் (8 Month Pregnancy Symptoms) பற்றிய முழு தகவல்களும் கொடுக்கப்பட்டிருக்கும். மேலும் ஸ்கேன் பற்றியோ, சாப்பிடும் உணவு பற்றியோ, உடற்பயிற்சி பற்றியோ அல்லது வேறு ஏதேனும் உடல் தொந்தரவுகள் இருந்தால் கண்டிப்பாக உங்கள் மருத்துவரை அணுகவும்.