கர்ப்பிணி கருவுற்ற நாள் முதல் பிரசவம் முடியும் வரை உணவு முறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கர்ப்பிணி எடுத்துகொள்ளும் உணவுகள் தாய் மற்றும் வயிற்றில் இருக்கும் சேய்க்கும் சேர்த்து என்பதால் எந்த உணவாக இருந்தாலும் அதன் தன்மை குறித்து ஆராய்ந்து எடுக்க வேண்டும்.
கர்ப்பத்தின் முதல் ட்ரைமெஸ்டர் என்னும் முதல் மூன்று காலம் மசக்கை குமட்டல், வாந்தியால் சரியாக உண்ண முடியாது. சாப்பிட பிடிக்காமல் போகும்.
அடுத்து வரும் இரண்டாம் ட்ரைமெஸ்டர் காலத்தில் உணவு மீது விருப்பம் இருக்கும். கர்ப்பத்தின் இரண்டாம் ட்ரைமெஸ்டரான 4 வது மாதத்தில் எடுத்துகொள்ள வேண்டிய உணவுகள் (4th month pregnancy food in tamil) என்ன, எதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம்.
கர்ப்பத்தின் நான்காவது மாதம் (4th month pregnancy food in tamil) என்பது கர்ப்பகால மசக்கை நின்ற காலமாக இருக்கும். இது சங்கடமான அறிகுறிகளை போக்கும். இதனால் உணவு மீது வெறுப்பு இல்லாமல் இருக்கும்.
அதனால் கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களை விட இரண்டாவது மூன்று மாதங்கள் வசதியானதாக இருக்கும். அதற்கேற்றாற் போல் குழந்தையும் இந்த காலத்தில் வேகமாக வளரும்.
அதனால் நீங்கள் நான்காவது மாதம் என்ன மாதிரியான உணவுகள்(4th Month Pregnancy Food in Tamil)எடுத்துகொள்ள வேண்டும் என்பதை பார்க்கலாம்.
4 மாத கர்ப்ப கால உணவுகள் – 4th Month Pregnancy Food in Tamil

அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகள்
கர்ப்பமாக இருக்கும் போது 4 வது மாதங்களில் புரோஜெஸ்ட்ரான் என்னும் ஹார்மோன் செரிமானத்தை குறைக்கிறது. குழந்தை வளரும் போது கருப்பை அளவு பெரிதாகிறது.
வயிறு விரிவடைகிறது. அப்போது மலச்சிக்கல் ஏற்படுவதும் இயல்பானதாகிவிடுகிறது. இந்த சிக்கலிலிருந்து விடுபட நார்ச்சத்து உணவுகள் தேவைப்படும். இது குடல் இயக்கத்தை சீராக்க உதவும்.
ஓட்ஸ், பார்லி, முழு தானியங்கள், கொட்டைகள், விதைகள், பருப்புகள், காய்கறிகள், பழங்களில் ஆப்பிள், வாழைப்பழம், பேரிக்காய், அத்திப்பழம், ஸ்ட்ராபெர்ரி, சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள், வைட்டமின்கள் மற்றும் ஃபோலேட் சத்துக்கள் சேர்ப்பது அவசியம்.
உணவில் தினமும் மூன்று முதல் ஐந்து வகையான பழங்கள் மற்றும் காய்கறிகள் சேர்க்க வேண்டும். பழங்களை அப்படியே துண்டுகளாக்கி எடுத்துகொள்ளுங்கள். இதில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கண்டிப்பாக தேவை.
ஒமேகா கொழுப்பு அமிலங்கள் சேர்க்க வேண்டும்
வயிற்றில் வளரும் குழந்தைக்கு கண் மற்றும் மூளை வளர்ச்சிக்கு ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் அவசியம். இது இதய ஆரோக்கியம் மற்றும் இனப்பெருக்க அமைப்பின் முறையான செயல்பாடுகளுக்கு இவை முக்கியம்.
அதே போன்று முடி, தோல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கும் உதவும். வளரும் குழந்தையின் எடை சீராக இருக்க உதவும். முன்கூட்டிய பிரசவம், குறைந்த எடை பிறப்பு மற்றும் குழந்தையின் அறிவாற்றல் குறைபாடு அபாயம் குறைய இந்த அமிலங்கள் தேவைப்படும்.
ஒமேகா கொழுப்பு அமிலங்கள் கொண்ட கொட்டைகள், ஆலிவ் எண்ணெய், சோயா, அக்ரூட் பருப்புகள், கொட்டைகள், விதைகள், சால்மன் மீன், மத்தி மீன், தாவர எண்ணெய் போன்றவற்றில் இவை உள்ளது.
ஃபோலிக் அமிலம் நிறைந்த உணவுகள்
கர்ப்பிணிக்கு உடலில் அதிக இரத்த ஓட்டம் தேவை. ஃபோலிக் அமிலம் கருவுறுதலுக்கு முன்பே எடுக்க கூடிய சத்தும் கூட.
இந்த ஃபோலிக் அமிலம் நிறைந்த உணவுகளை எடுத்துகொள்ளும் போது வயிற்றில் வளரும் குழந்தைக்கு 70% நரம்புக்குழாய் குறைபாடுகளை தடுக்கலாம் என்று ஆய்வு கூறுகிறது. இதை தினசரி உணவின் மூலம் பெறலாம்.
ஃபோலிக் அமிலம் சப்ளிமெண்ட் கிடைக்கும். மேலும் இந்த ஃபோலிக் அமிலம் பருப்புகள், பச்சை இலை காய்கறிகள் மற்றும் கொட்டைகளில் அதிகமாக கிடைக்கும்.
இரும்புச்சத்து நிறைந்த உணவுகள்
நான்காவது மாதத்தில் இரத்த அளவு அதிகரிக்கும் போது இரும்புச்சத்து உள்ள உணவுகள் அவசியம் தேவை. இது கருவளர்ச்சிக்கு உதவுகிறது.
கொட்டைகள், பருப்புகள், உலர்ந்த பழங்கள், கோதுமை உணவுகள், கீரைகள், இறைச்சி, டோஃபு, விலங்குகளின் உறுப்புகள், பச்சை நிற காய்கறிகள் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.
இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் உடல் உறிஞ்சுவதற்கு வைட்டமின் சி தேவை. அதனால் வைட்டமின் சி நிறைந்த பச்சை குடைமிளகாய், முட்டைகோஸ், காலிஃப்ளவர். சிட்ரஸ் பழங்கள் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.
கால்சியம் நிறைந்த உணவுகள்
குழந்தையின் வலுவான எலும்புகளின் வளர்ச்சிக்கு கால்சியம் முக்கியம். கர்ப்பிணிக்கு கர்ப்பகாலத்தில் அதிக கால்சியம் தேவை. கால்சியம் உடலில் உறிஞ்சுவதற்கு வைட்டமின் டி போதுமான அளவு இருக்க வேண்டும்.
கால்சியம் உட்கொள்வதை அதிகரிக்க தினமும் 2 டம்ளர் பால் குடிக்க வேண்டும். பால் பால் உணவுகள், தயிர், சீஸ், கீரைகள், கொட்டைகள், மீன் போன்ற கால்சிய உணவுகளும் சேர்த்து எடுத்துகொள்ள வேண்டும்.
உடல் கால்சியம் உறிஞ்சுவதற்கு வைட்டமின் டி நிறைந்த சால்மன், கொழுப்பு மீன் எடுப்பதோடு சூரிய ஒளி படும்படி இருப்பதும் அவசியம்.
இதையும் படிக்க : கர்ப்ப காலத்தில் கால்சியம் ஏன் அவசியம்?
புரதங்களும் கார்போஹைட்ரேட் உணவுகளும்
புரதங்கள், தசைகள், திசுக்கள் மற்றும் டிஎன்ஏ போன்ற கட்டுமான தொகுகளுக்கு அவசியம். உடலுக்கு ஆற்றல் அளிக்க கார்போஹைட்ரேட்டுகள் அவசியம். அதனால் உணவில் புரதமும் கார்போஹைட்ரேட்டுகளும் சேர்ப்பது அவசியம்.
புரதம் நிறைந்த பருப்புகள், விதைகள், கோதுமை, ராகி, ஓட்ஸ், பயறு வகைகள், கோழி இறைச்சி மற்றும் சோயா பொருள்கள் என எல்லாமே சாப்பிட வேண்டும். புரதங்கள் உருவாக்க உடலில் துத்தநாகம் போதுமான அளவு இருக்க வேண்டும்.

துத்தநாகம் நிறைந்த சிப்பி, கீரைகள், காளான்கள், பூசணி கொட்டைகள், விதைகள், கோழி இறைச்சி மற்றும் பீன்ஸ் வகைகளும் சேர்க்க வேண்டும். போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம்.
நான்காவது மாதத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்
தவிர்க்க வேண்டிய உணவுகளில் பாலாடைக்கட்டிகள் பேஸ்டுரைஸ் செய்யப்படாத பாலில் இருந்து இவை தயாரிக்கப்படுகின்றன. இது பாக்டீரியா மற்றும் வைரஸ் கொண்டிருக்கலாம். அதனால் சீஸ் என்னும் பாலாடைகட்டி சாப்பிட கூடாது.
பேக்கரி உணவுகள் மைதா உணவுகள் போன்றவையும் தடுக்க வேண்டும். இது மலச்சிக்கலை மேலும் அதிகரிக்கும்
என்பதால் மைதா சேர்த்த உணவுகள் எதையும் சாப்பிட கூடாது.

கடல் மீன்கள் பாதரசம் கொண்டிருக்கலாம். அதனால் மீன்கள் எடுக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சில பெண்கள் முட்டையை அரை வேக்காடாக எடுத்துகொள்வார்கள். பச்சை முட்டைகளில் சால்மோனெல்லா பாக்டீரியா இருக்கலாம். இது கருவில் இருக்கும் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும்.
சாலையோர உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அவை சுகாதாரமில்லாமல் இருக்கலாம். மோசமான உணவுகளாக இருக்கலாம். உலர் பழங்கள் நல்லது என்றாலும் அதிகமாக சேர்க்க கூடாது.
திரவ ஆகாரங்கள் நல்லது என்று காஃபி போன்ற பானங்கள் அதிகம் குடிக்க கூடாது. கஃபைன் சேர்த்த உணவுகள் ஆரோக்கியம் கிடையாது. சில உணவுகள் நல்லது என்றாலும் கர்ப்பிணியின் உடல் ஆரோக்கியத்துக்கு ஒத்துகொள்ளாமல் இருக்கலாம்.
அதனால் கர்ப்பகால உணவு குறித்து டயட்டீஷியனிடம் கேட்டு அதன்படி எடுத்துகொள்வது கருவின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்க உதவும்.