28 நாளில் கர்ப்பம் தெரியுமா (28 Days Pregnancy) 4 வார கர்ப்பத்தில் வயிறு எப்படி இருக்கும் மற்றும் அதன் அறிகுறிகள் என்ன என்றெல்லாம் உங்களுக்கு இப்போது கேள்விகள் இருக்கலாம். மேலும் 28 நாளில் உங்கள் கர்ப்பத்தை பரிசோதித்து பார்க்க முடியுமா அப்படி செய்தால் அது துல்லியமான முடிவுகளை காட்டுமா என்ற கேள்விக்கெல்லாம் பதிலாகவே இதோ இந்த பதிவு.
28 நாளில் கர்ப்பம் (28 Days Pregnancy in Tamil) உறுதி செய்ய முடியுமா?
28 நாளில் கர்ப்பம் தெரியுமா (28 Days Pregnancy in Tamil) அதனை உறுதி செய்ய முடியுமா என்று கேட்டால் அதற்கு பதில் முடியாது. பொதுவாக 28 நாளில் கர்ப்பத்தை உறுதி செய்வது என்பது சற்று கடினம் தான். உங்கள் உடலில் எச்.சி.ஜி ஹார்மோன் சுரக்க ஆரம்பித்திருந்தாலும் அதனை வைத்து பரிசோதித்து பார்க்கும் அளவுக்கு துல்லியமான முடிவுகளை கொண்டிருக்காது.
கர்ப்பத்தின் 28வது நாளில் (28 Days Pregnancy in Tamil) பெரிதாக எந்த ஒரு அறிகுறிகளும் தெரியாது. ஆனால் கருமுட்டையுடன் விந்தணு இணைந்து கரு உருவாக தொடர்வதால் ஒரு சில அறிகுறிகள் மட்டும் உங்களால் உணர முடியும்.
அதிலும் ஒரு சில பெண்களுக்கு எந்த ஒரு அசவுகரியமும் இருக்காது. நீங்கள் கர்ப்பம் தரித்திருக்கிறீர்கள் என்று தெரிந்த போதிலிருந்தே உங்களின் உடல்நிலையில் அதிகம் கவனம் கொள்வது அவசியம்.
28 நாளில் கர்ப்பிணி வயிற்றில் என்ன நடக்கிறது?
கருவுற்ற முட்டை ஃபலோபியன் குழாயின் வழியாகச் சென்று செல்களாகப் பிரிகிறது. கருத்தரித்த 3 முதல் 4 நாட்களுக்குப் பிறகு இது கருப்பையை அடைகிறது. பிரிக்கும் செல்கள் பின்னர் சுமார் 2 முதல் 3 நாட்களுக்கு கருப்பையைச் சுற்றி மிதக்கும் பந்துகளை உருவாக்குகின்றன. இது தான் 28 நாளில் கர்பிணி (28 Days Pregnancy in Tamil) பெண்களின் வயிற்றில் நடக்கும்.
28 நாள் கர்ப்பம் (28 Days Pregnancy in Tamil) எத்தனை வாரம்?
நீங்கள் 28 நாள் கர்ப்பத்தில் இருந்தால் இது உங்களுக்கு 4 வார கர்ப்பமாகும். 4 வார கர்ப்பம் என்பது 1 மாதம் ஆகும்.
எப்போது கர்ப்ப பரிசோதனை செய்யலாம்?
28 நாளில் கர்ப்பம் தெரியுமா (28 Days Pregnancy in Tamil) இல்லை இப்போது கர்ப்ப பரிசோதனை செய்தால் துல்லியமாக இருக்குமா என்று கேட்டால் பெரும்பாலான பகுதிகளில் மாதவிடாய் வரும் முன்னரே கர்ப்பத்தை அறியலாம் என்று கூறுவார்கள். ஆனால் சிறிது காலம் காத்திருந்து அதன் பின்னர் முயற்சி செய்தால் உங்கள் கர்ப்பத்தை நன்றாக உறுதி செய்யலாம்.
உங்களின் மாதவிடாய் காலம் தவறிய பின் ஒரு வாரம் கழித்து நீங்கள் பரிசோதித்து பார்க்கலாம். உங்கள் கர்ப்பத்தை பரிசோதிக்க மருந்தகத்தில் கிடைக்கும் கர்ப்ப பரிசோதனை டெஸ்ட் கிட் வாங்கி பரிசோதிக்கலாம். அதனை சிறுநீரில் தான் பரிசோதனை செய்ய வேண்டும். பரிசோதித்த கிட் இல் இரண்டு கோடுகள் வந்தால் நீங்கள் கர்ப்பம் என்று அர்த்தம்.
எதனால் சிறுநீரில் பரிசோதிக்க வேண்டும் என்றால் கர்ப்பமான பெண்களின் சிறுநீரில் மனித கோரியானிக் கோனாடோட்ரோபின் அதாவது எச்.சி.ஜி ஹார்மோனின் அளவு அதிகமாக சுரக்கும். அதன் அளவை பொறுத்தே கர்ப்பத்தை உறுதி செய்கின்றனர். இந்த பரிசோதனை அதிகாலையில் செய்யும் போது இன்னும் துல்லியமான முடிவுகளை தருவதாக கூறுகின்றன.
கர்ப்பம் உறுதி செய்ய hCG பரிசோதனை அவசியமா?
கர்ப்பம் உறுதி செய்ய எச்சிஜி பரிசோதனை மிகவும் அவசியம். ஏனென்றால் கர்ப்பமான ஒரு பெண்ணின் உடலில் அதிக hcg (Human Chorionic Gonadotropic Hormone) ஹார்மோன் சுரக்கும். அதனை அவர்களின் சிறுநீரின் மூலமும், இரத்தத்தின் மூலமுமே கண்டறியலாம். இந்த ஹார்மோன் சிறுநீரில் காணப்பட்டால், பாசிட்டிவ் என்று கூறுவார்கள். இது தான் கர்ப்பத்தை உறுதி செய்யும்.
ஏன் hCG பரிசோதனை செய்யப்படுகிறது?
கர்ப்பத்தின் 4 வாரங்களில், உங்கள் உடலில் உள்ள ஒரு சிறிய உயிர் உங்கள் கருப்பையில் பதிந்து, அடுத்த 36 வாரங்களில் வளர்ந்து வெளிவரும். கருமுட்டை கருப்பையில் இணந்தவுடன் எண்டோமெட்ரியத்தில் (உள்வரிச்சவ்வு) பொருத்துவதால் கர்ப்ப ஹார்மோன் hCG ஐ அதிகரிக்கிறது. வார இறுதிக்குள், உணர்திறன் கொண்ட வீட்டில் செய்யப்படும் கர்ப்ப பரிசோதனை மூலம் கண்டறியும் அளவுக்கு hCG இருக்கலாம்.
28 நாளில் கர்ப்ப (28 Days Pregnancy in Tamil) அறிகுறிகள் தெரியுமா?
4 வது வாரத்தில் நீங்கள் ஆரம்ப கால கர்ப்ப அறிகுறிகளைக் கொண்டிருக்கிறீர்களா என்பதைக் கூறுவது கடினம். கர்ப்பமாக இருக்கும் போது எல்லாருக்கும் அறிகுறிகள் தெரியாவிட்டாலும் சில அறிகுறிகள் பொதுவானதாக இருக்கும். இருப்பினும், டிரிபாசிக் என்பது உடல் வெப்பநிலை கண்டறிய பயண்படுத்தும் ஓர் விளக்கப்படமாகும்.
அதன் அடிப்படையின் படி உடல் வெப்பநிலை முறை அல்லது உள்வைப்பு இரத்த போக்கை நீங்கள் கவனிக்கலாம். சிலருக்கு இந்த ஆரம்ப அறிகுறிகள் எதுவும் இல்லாமலும் இருக்கலாம்.
PMS போன்ற அறிகுறிகள்
உங்கள் உடலில் உள்ள ஹார்மோன்களை மாற்றுவது உங்கள் மாதவிடாய்க்கு முன் நீங்கள் வலியினை அனுபவிப்பதை போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். வீக்கம், சோர்வு, மனநிலை மாற்றங்கள், மென்மையான மார்பகங்கள் மற்றும் லேசான பிடிப்புகள் கூட ஆரம்பகால கர்ப்பத்தின் பொதுவான அறிகுறிகளாகும்.
டிரிபாசிக் விளக்கப்படம்(Triphasic chart )
உங்கள் அடிப்படை உடல் வெப்பநிலையை (BBT) ஒரு விளக்கப்படத்தில் நீங்கள் கண்காணித்தால், வெப்பநிலையில் சீராக அதிகரிக்க தொடங்கும். இது அண்டவிடுப்பைக் குறிக்கிறது. அண்டவிடுப்பின் ஒரு விளக்கப்படம் இரண்டு கட்ட வெப்பநிலைகளைக் கொண்டுள்ளது.
சில நேரங்களில், அண்டவிடுப்பின் ஏழு முதல் பன்னிரண்டு நாட்களுக்குப் பிறகு தொடங்கும் நிலையான வெப்பநிலையின் அளவு இரட்டிப்பாகியிருக்கும். மூன்று வெவ்வேறு வெப்பநிலைகளைக் கொண்ட ஒரு விளக்கப்படம் திரிபாசிக் (மூன்று கட்டங்கள்) என்று அழைக்கப்படுகிறது. மேலும் இது கர்ப்பத்தின் சாத்தியமான அறிகுறியாகும்.
உள்வைப்பு இரத்தப் போக்கு
உங்கள் குழந்தை கருப்பையில் பொருத்தும் நேரத்தில், உங்கள் யோனியில் ஒரு சிறிய அளவு இரத்த துளிகள் அல்லது லேசான இரத்தப்போக்கை அனுபவிக்கலாம்.
இது சாதாரண மாதவிடாய் வருவதற்கான அறிகுறிகள் என்று நீங்கள் தவறாக நினைக்கலாம். ஆனால் இது கர்ப்பத்தின் முதல் அறிகுறியாக கூட இருக்கலாம்.
உங்காளுக்கு இம்ப்ளாண்டேஷன் ஸ்பாட்டிங் இல்லை என்றால் கவலைப்பட வேண்டாம், ஏனெனில் இந்த அறிகுறி அனைவருக்கும் இருக்காது.
28 நாள் கர்ப்பிணிகள் (28 Days Pregnancy in Tamil) செய்ய வேண்டியது
- நன்றாக சாப்பிட வேண்டும்.
- உடற்பயிற்சி தினமும் மிதமாக செய்ய வேண்டும்.
- கொஞ்சமாக ஓய்வெடுப்பது அவசியம்.
- வீட்டில் கர்ப்ப பரிசோதனை கிட் வாங்கவும்.
- மகப்பேறுக்கு முந்தைய வைட்டமின்களை தொடர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள்.
- நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
- எப்போதும் மனதை சந்தோசமாக வைத்து கொள்ளுங்கள்.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
28 நாளில் கர்ப்பம் தெரியுமா (28 days pregnancy) என்ற உங்களின் கேள்விகளுக்கு இந்த பதிவு பதிலாக இருந்திருக்கும். ஆரம்பகால கர்ப்பத்தில் உங்களின் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டும். மேற்கொண்டு எழும் சந்தேகங்களுக்கு உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள்.